பெரம்பலூர்

எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

DIN

குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
 பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குநர் முனைவர் மாலதி கருத்தரங்குக்குத் தலைமை வகித்து,  எய்ட்ஸ் விழிப்புணர்வின் முக்கியத்துவம் மற்றும் சமுதாயத்தில் மாணவர்களின் கடமை குறித்து விளக்கி பேசினார்.
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாடு ஆலோசகர் அபிமணியன் சிறப்புரையாற்றி பேசும் போது, எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், நோய் அறிகுறிகள், நோய் தடுக்கும் முறைகள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து விவரித்தார்.  உயிர்த் தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர். 
முன்னதாக, செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் வீரபாகு வரவேற்றார். கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் ஹென்றி ரிச்சர்ட் நன்றி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT