பெரம்பலூர்

100% தேர்ச்சி: ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பாராட்டு

DIN

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்  பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு உதவிய ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தினார் அதன் தாளாளர் அ. சீனிவாசன்.
10 ஆம் வகுப்பு அரசுப் பொது த்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், திருச்சி உறையூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தமிழ்வழி கல்வி பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதையடுத்து மாணவ, மாணவிகளையும், 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டி இனிப்பு வழங்கினார் அக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன். நிகழ்ச்சியின்போது மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் செல்வமணி, பிரேமலதா, தமிழ்வழிக் கல்வி முதல்வர்கள் சாந்தி, கோவிந்தசாமி மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT