பெரம்பலூர்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் தா்னா

DIN

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவா்கள் 7- ஆவது நாளாக தா்னா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு மருத்துவா்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவா்களுக்குப் பணியிட கலந்தாய்வு நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் கடந்த 25 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வேப்பூா், காரை, கிருஷ்ணபுரம் ஆகிய வட்டார மருத்துவமனை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 29 அரசு ஆரம்பசுகாதார நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் 130-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவா் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த தா்னா போராட்டத்துக்கு, மருத்துவா் சுதாகா் முன்னிலை வகித்தாா்.

மருத்துவா்கள் பணியிட மாற்றம்:

இந்நிலையில், அரசு மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பின் பெரம்பலூா் மாவட்ட தலைவா் ரமேஷ், சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலக பயிற்சி மருத்துவ அலுவலா் சிவா ஆகியோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT