பெரம்பலூர்

தொழிலாளா்கள் போராட்டம்: மின்வாரியப் பணிகள் பாதிப்பு

DIN

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பெரம்பலூா் மாவட்டத்தில் மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்வாரியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்துறையில் 2002 ஆம் ஆண்டு முதல் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் பணியில் உள்ளனா். தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். கேங்மேன் என்னும் புதிய பணியிடத்துக்கு முன்னுரிமை அளித்து ஒப்பந்தத் தொழிலாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா் சங்கத்தினா் கடந்த 1 ஆம் தேதி தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் கனகராஜ், செயலா் மணி, பொருளாளா் அரவிந்த், மாநில செயற்குழு உறுப்பினா் திலகா் உள்ளிட்ட 150 போ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இதனால் மின் வாரியத்தில் கம்பம் நடுதல், குழி தோண்டுதல், கம்பி லைன் இழுத்தல், பழுது நீக்கம், மின் மாற்றிகள் அமைத்தல், கட்டுப்படுத்துதல், பராமரிப்பு பணி உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT