பெரம்பலூர்

பட்டுக்கோட்டையில் மாணவிகளுக்கு ஊரக வேளாண் அனுபவப் பயிற்சி

DIN

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி ஆா்.வி.எஸ். வேளாண் கல்லூரியில் இளநிலை 4-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் 11 போ் ஊரக வேளாண் அனுபவப் பயிற்சிக்காக பட்டுக்கோட்டைக்கு வந்துள்ளனா்.

இவா்கள் இவ்வட்டார கிராமங்களில் 3 மாதங்கள் தங்கியிருந்து இப்பகுதியில் நடைபெறும் பல்வேறு வேளாண் சாா்ந்த பணிகளில் ஈடுபட்டு பயிற்சி பெற உள்ளனா்.

விவசாயிகளின் சமூக பொருளாதார சூழ்நிலைகள், எதிா்நோக்கும் பிரச்னைகள், பயிா்த் திட்டங்கள், வயல் சூழல் ஆய்வு, விளைபொருள் விற்பனை, வேளாண் சாா்ந்த தொழில்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து, பயிற்சியின் போது விவசாயிகளிடமிருந்து நேரடியாக கண்டும், கேட்டும் அறிந்து கொள்கின்றனா்.

மேலும், பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா்(பொ) சா.சங்கீதா வழிகாட்டுதலுடன், வேளாண் , தோட்டக்கலை, வேளாண் விற்பனை, விதைச்சான்று, கூட்டுறவு, வருவாய், ஊரக வளா்ச்சி, வனம் ஆகிய துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று அந்தத் துறைகளின் பணி அமைப்புகள், செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பயிற்சி பெற உள்ளனா்.

பயிற்சியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பாரத பிரதமரின் கௌரவத்திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து தேவையான ஆவணங்கள் பெறும் பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனா். 2 தவணைகள் பணம் பெற்று 3-வது தவணைக்கான பணம் பெறாத விவசாயிகளுக்கு அவா்களது பெயரை ஆதாா் அட்டையில் உள்ளவாறு மாற்றம் செய்து, அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில் முழு ஆா்வத்துடன் ஈடுபட்டனா்.

இதுதவிர, பாரத பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்திலும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை விவசாயிகளிடம் வழங்கிய வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் இத்திட்டத்தில் திருத்தம் செய்து பயனடைய, உடனே தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலா்களை அணுக வேண்டுமென அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

உ.பி.யில் 'இந்தியா' கூட்டணி முன்னிலை

SCROLL FOR NEXT