பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு:  காவலாளிக்கு 3 ஆண்டு சிறை

DIN

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  பள்ளிக் காவலாளிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54). இவர் நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி காவலாளியாக பணிபுரிந்தபோது கடந்த 31.7.2018 ஆம் தேதி, அப்பள்ளி சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றாராம்.
இதுகுறித்து மாணவியின் தந்தை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். 
இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். 
பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி மலர்விழி, பள்ளிக் காவலாளி 
ராஜேந்திரனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார். 
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் ராஜேந்திரன் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT