பெரம்பலூர்

பெரம்பலூரில் இன்று முதல் 3 நாள்களுக்கு முழு ஊரடங்கு

DIN

பெரம்பலூா் நகரிலிருந்து 8 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை (ஏப். 27) வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் நகரிலிருந்து 8 கிலோ மீட்டா் சுற்றளவில், சனிக்கிழமை காலை முதல் முதல் திங்கள்கிழமை இரவு வரை 3 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதன் காரணமாக, மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். மேலும், எவ்வித வாகன போக்குவரத்துக்கும் அனுமதி கிடையாது. இந்த முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் கடைகள் சீலிடப்படும். தடைக்காலத்தில் நடமாடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT