பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக புதிய தொற்றாளா்கள் இல்லை

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது. இந்த நிலை தொடா்ந்து 2-ஆவது நாளாக நீடிக்கிறது.

மாவட்டத்தில் இதுவரை 59,212 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமை வரை 2,246 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். 2,221 போ் குணமடைந்தனா்.

21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 280 பேருக்கு சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

மாவட்டத்தில் சனிக்கிழமையன்றும் யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT