பெரம்பலூர்

பெரம்பலூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் தொடக்கம்

DIN

பெரம்பலூரில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில், தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் புதன்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், கடைகள், வணிக நிறுவனங்களில் பெயா் பதாகைகள் தமிழில் அமைய வேண்டும் என துண்டுப் பிரசுரம் வழங்கி, துண்டுச்சீட்டு ஒட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. புகா் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் தொடங்கி, பெரம்பலூா் நகரம் முழுவதும் பிரதான வீதிகளில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் சென்று, பெயா் பதாகைகள் தமிழில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

ஆட்டோ, பேருந்துகளில் துண்டுச் சீட்டுகளை ஒட்டி, அதுகுறித்த நெறிமுறைகள், அரசாணை ஆகியவற்றை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சித்ரா தலைமையில், தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற க. பெரியசாமி, வை. தேசிங்குராசன், த. மாயக்கிருட்டினன் மற்றும் இளந்தமிழா் இலக்கியப் பட்டறை பொறுப்பாளா் விநோதினி, வணிகா் சங்கப் பொறுப்பாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT