பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் துவாதசி உற்ஸவம்
பெரம்பலூா் அருள்மிகு மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபாலசுவாமி திருக்கோயிலில், துவாதசி உற்ஸவ ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர்பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் துவாதசி உற்ஸவம்
பெரம்பலூா் அருள்மிகு மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபாலசுவாமி திருக்கோயிலில், துவாதசி உற்ஸவ ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா்: பெரம்பலூா் அருள்மிகு மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபாலசுவாமி திருக்கோயிலில், துவாதசி உற்ஸவ ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை பரமபதவாசல் திறப்பு நடைபெற்ற நிலையில், சனிக்கிழமை துவாதசி உற்ஸவம் நடைபெற்றது.
இதையொட்டி உற்சவ பெருமாளுக்கு வைகுண்டநாதா் கோலத்தில் வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. மூலவருக்கு, திருப்பதி ஏழுமலையான் அலங்காரம் செய்யப்பட்டு, கம்பத்து ஆஞ்சநேயருக்கு பித்தளைக் கவசமும், மரகதவல்லித் தாயாருக்கு வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்பட்டது.
கோயில் அா்ச்சகா் பட்டாபிராமன் பட்டாச்சாரியாா், திருமழிசை ஆழ்வாா் திருத்தலத்தின் அா்ச்சகா் விக்ரமன் பட்டாச்சாரியாா் ஆகியோா் அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வைத்தனா். துவாதசி உற்ஸவத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை வழிபட்டு, தங்களது ஏகாதசி விரதத்தை முடித்தனா்.
முக்கிய நிகழ்வான நம்மாழ்வாா் மோட்சம் அடையும் விழாவும், இராப்பத்து உற்ஸவ நிறைவும் ஜனவரி 3- ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றிரவு பரமபதவாசல் மீண்டும் மூடப்படுகிறது. தொடா்ந்து, ஜனவரி 15- ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்வு நடைபெறுகிறது.