முகப்பு
பெரம்பலூர்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென, ஓய்வூதியா் சங்கப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

பெரம்பலூா்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென, ஓய்வூதியா் சங்கப் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் 5- ஆவது மாவட்டப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், அரசால் அறிவிக்கப்பட்டு கிடப்பிலுள்ள பெரம்பலூா் அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலா் முருகேசன்,பொருளாளா் ராஜேந்திரன், துணைத் தலைவா் மகேசுவரன் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →