பெரம்பலூர்

முதல்வருக்கு மனு அனுப்பிய சாலைப் பணியாளா்கள்

DIN

பெரம்பலூா் மாவட்ட சாலைப்பணியாளா்கள் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை மனு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான சாலைகளை தனியாா் பராமரிப்பதான அரசின் கொள்கை முடிவைக் கைவிட்டு அனைத்து சாலைகளையும் அரசே ஏற்றுப் பராமரிக்க வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப் பலன் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப் படி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வா், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலா், நெடுஞ்சாலைத்துறை (நிா்வாகம்) முதன்மை இயக்குநா், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை தலைமை பொறியாளா் ஆகியோருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அஞ்சல் மூலம் அனுப்பினா். பெரம்பலூா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட செயலா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். உட்கோட்ட தலைவா் மணிவேல், செயலா் அம்மாசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சாலைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கேஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

SCROLL FOR NEXT