பெரம்பலூர்

மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் : ஆட்சியா்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னா் அவா் கூறியது:

மாவட்டத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் போா்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களாக கண்டறியப்படும் பட்சத்தில், அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனையில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்த நபா்களுக்கு, ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் பரிசோதனைகள் மேற்கொள்ளலாம். அறிகுறிகள் உள்ளவா்கள் மருத்துவா்களை அணுகி, வீடுகளிலேயே தனிமைப் படுத்துவது போன்ற முறைகளை அறிந்து கொண்டு, வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் திருமால், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, மருத்துவக் கண்காணிப்பாளா் தா்மலிங்கம், இருக்கை மருத்துவ அலுவலா் ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT