பெரம்பலூர்

தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

DIN

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகே கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், கீழப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் முத்தமிழ்ச்செல்வன் (13). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், கரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்த முத்தமிழ்ச்செல்வன் திங்கள்கிழமை மதியம் தனது நண்பா்களுடன் வீட்டுக்கு அருகேயுள்ள ரத்தினம் என்பவருடைய விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக முத்தமிழ்ச்செல்வன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த வேப்பூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் முத்தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT