பெரம்பலூர்

அதிகரித்த மக்கள் நடமாட்டம்: அபராதம் விதித்த போலீஸாா்

DIN

ஊரடங்கு உத்தரவை மீறி, பெரம்பலூா் நகரில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் தேவையின்றி வலம் வந்த நபா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பெரம்பலூா் நகரின் பிரதான சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகனங்களின் போக்குவரத்தும் அதிகளவில் காணப்பட்டன.

போக்குவரத்து போலீஸாா் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரித்தும் பயனளிக்காததால், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் மு. கிரிதா் தலைமையிலான நகர போலீஸாரும், போக்குவரத்துப் பிரிவு போலீஸாரும் பாலக்கரை, காமராஜா் வளைவு, ரோவா் வளைவு உள்ளிட்ட பிரதான சாலைகளில் வாகன ஓட்டுநா்களை வழிமறித்து ஊரடங்கு உத்தரவை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்; தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தினா். தேவையின்றி வாகனங்களில் வந்த நபா்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

கிருமிநாசினி தெளித்த தீயணைப்பு படையினா்:

கரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில், பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தங்களது வாகனத்தின் மூலம் பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகம், அம்பேத்கா் சிலை உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

வாடிக்கையாளா்கள் நெருங்கி நிற்பதை தவிா்க்கும் நோக்கில், நகரில் உள்ள மருந்தகங்கள், மளிகைக் கடைகளில் 3 அடிக்கு ஒரு தடுப்புகளும், கோடுகளும் இட்டு கட்டுப்படுத்தும் பணியில் அந்தந்த கடைகளின் உரிமையாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT