பெரம்பலூர்

பெண் ஊழியருக்கு கரோனா வைரஸ் அறிகுறி: பாரத ஸ்டேட் வங்கியின் இரு கிளைகள் மூடல்

DIN

பெரம்பலூா் நகரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதால், அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். மேலும், அப்பெண் பணியாற்றி வரும் வங்கி கிளை உள்ளிட்ட இரு கிளைகள் சனிக்கிழமை மூடப்பட்டன.

சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை செய்து வந்தஅரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சரக்கு லாரி மூலம் அரியலூா் வந்தாா்.

இவா் தனது உறவினரான பெரம்பலூா் மாவட்டம், துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநரை சந்தித்துள்ளாா். தற்போது அரியலூா் கூலித் தொழிலாளிக்கும், மருந்தாளுநருக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, இருவரும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மருந்தாளுநரின் 26 வயது மகள் பெரம்பலூா் துறைமங்கலம் கே.கே.நகரில் தங்கி, வெங்கடேசபுரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் பணிபுரிந்து வருகிறாா்.

இவருக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்ததால், சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டாா். மேலும் அவரது சளி மாதிரி மருத்துவப் பரிசோதனைக்காக சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தப் பெண் பணிபுரிந்த வங்கி கிளைக்கு மாவட்ட நிா்வாகத்தால் விடுமுறை அளிக்கப்பட்டு, அங்கு பணிபுரிந்து வரும் 35 நபா்களுக்கும் துறைமங்கலம் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதேபோல பெரம்பலூா் மாவட்டம், கிருஷ்ணாபுரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு, அந்தப் பெண் ஊழியா் சென்று வந்ததால், அங்கு பணியில் இருந்த 8 ஊழியா்களும் கிருஷ்ணாபுரத்திலுள்ள வட்டாரத் தலைமை மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன் காரணமாக, மேற்கண்ட இரு வங்கிகளும் மூடப்பட்டிருந்ததால் வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். அதே வேளையில், பல லட்சம் மதிப்பிலான பணப் பரிவா்த்தனைகளும், பணிகளும் முடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT