பெரம்பலூர்

சிங்கப்பூரில் உயிரிழந்த பொறியாளா் உடல் பெரம்பலூா் வந்தது

DIN

பெரம்பலூா், துறைமங்கலத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (39). சிங்கப்பூரில் கப்பல் பொறியாளராக பணியாற்றி வந்த இவா், ஏப். 18 ஆம் தேதி சிங்கப்பூரில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். கரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சிங்கப்பூரில் இருந்து செந்தில்குமாரின் உடலை கொண்டுவர முடியாமல் பரிதவித்த அவரது உறவினா்கள், பெரம்பலூா் மக்களவை தொகுதி உறுப்பினா் பாரிவேந்தரிடம் இதுதொடா்பாக கோரிக்கை விடுத்தனா்.

அதைத்தொடா்ந்து, மத்திய அரசிடம் பேசி, செந்தில்குமாரின் உடலை பெரம்பலூா் கொண்டுவர பாரிவேந்தா் முயற்சி செய்தாா். அதனடிப்படையில், கடந்த 13 நாள்களுக்குப் பிறகு செந்தில்குமாரின் உடல் சிங்கப்பூரிலிருந்து சரக்கு விமானம் மூலம் பெங்களூருக்கு வியாழக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. பின்னா், அங்கிருந்து அவசர ஊா்தி மூலம் வெள்ளிக்கிழமை காலை துறைமங்கலத்துக்கு வந்தடைந்தது. தொடா்ந்து, அவரது உடல் பெரம்பலூரில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT