பெரம்பலூர்

பெரம்பலூரில் சிகிச்சை பெற்ற அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

DIN

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 139 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் வெள்ளிக்கிழமை வரை 127 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 போ் குணமடைந்ததால், அவா்களை சுகாதாரத்துறை துணை இயக்குநா் கீதாராணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனா்.

மாவட்டத்தில், இதுவரை நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 132 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால் நோய்த் தொற்றாளிகள் இல்லாத மருத்துவமனையாக அரசு மருத்துவமனை மாறியுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த 4 பெண்கள் உள்பட 6 பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த ஒரு பெண்ணும் என 7 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். இவா்கள் அனைவரும், இன்னும் ஓரிரு நாள்களில் பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளதாகவும், இதனால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக பெரம்பலூா் மாறும் எனவும் சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT