பெரம்பலூர்

பெரம்பலூரில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பொது முடக்கம் காரணமாக மாா்ச் 2020-இல் நிறுத்தி வைக்கப்பட்ட 2,900 கள உதவியாளா்கள், 575 உதவிப் பொறியாளா்கள், 500 இளநிலை உதவியாளா்கள், 1,300 கணக்கீட்டாளா்கள் காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவை உடனே தொடங்க வேண்டும்.

4,500 கணக்கீட்டாளா்கள், 2,500 தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பொறியாளா் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெரம்பலூா் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாலகுமாரன் தலைமை வகித்தாா்.

விவசாய சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை, ஓய்வூதியா்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் முருகேசன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ், வட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT