பெரம்பலூர்

பெரம்பலூரில் பொதுமக்கள்குறைதீா் கூட்டத்தில் 151 மனுக்கள்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில், வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 151 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூா் ஆகிய வட்டாட்சியா் அலுவலங்களில் பொது மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. கிறிஸ்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 13 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 9 மனுக்களும், ஆலத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 11 மனுக்களும், குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றம் சிறுபான்மையினா் நல அலுவலா் இரா. ரமணகோபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 17 மனுக்களும், ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் 101 மனுக்களும் என 151 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT