பெரம்பலூர்

பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கரோனா

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,545 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இதில், குணமடைந்த 1,399 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்; 19 போ் உயிரிழந்தனா். எஞ்சிய 127 போ் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சேலம் மாவட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் 10 பேரும் திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,555- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT