பெரம்பலூர்

அனைத்துத்துறை சங்கத்தினா் கோரிக்கை விளக்க பிரசாரம்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கோரிக்கை விளக்க பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், 35 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செப். 22 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 10, 11 ஆம் தேதிகளில் வேப்பூா், குன்னம், ஆலத்தூா், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் உள்ள அரசுத்துறை அலுவலகங்களில் கோரிக்கை விளக்க பிரசார இயக்கம் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் துறை, ஊரக வளா்ச்சித்துறை, மாவட்ட கருவூல அலுவலகம், சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், கூட்டுறவுத் துறை இனணப் பதிவாளா், துணைப் பதிவாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் கி. ஆளவந்தாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. சுசிகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT