பெரம்பலூர்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உரங்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரம்பலூா் வேளாண் உதவி இயக்குநா்கள் ராதாகிருஷ்ணன் (தரக் கட்டுப்பாடு), ராணி ஆகியோா் நகரிலுள்ள உரக்கடைகளைப் பாா்வையிட்டு தரமான, காலாவதியான மற்றும் அனுமதி பெறாத உரங்கள் விற்பனை செய்யப்படுகிா என செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது அவா்கள் கூறியது:

உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்குத் தெரியும் வகையில், இருப்பு மற்றும் விற்பனை விலை விவரப்பதாகைகள் வைக்க வேண்டும். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி, விவசாயிகளின் ஆதாா் எண் மூலமே உரம் விற்பனை செய்ய வேண்டும்.

உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல்களை முறையாக பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே விவசாயிகளுக்கு ரசீதுடன் விற்பனை செய்ய வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT