பெரம்பலூர்

தகுதிச் சான்றில்லாத 7 வாகனங்கள் பறிமுதல்

DIN

பெரம்பலூரில் தகுதிச் சான்றிதழ் இல்லாத 7 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் புகா் மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலா் பழனிசாமி தலைமையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என பேருந்துகள், ஷோ் ஆட்டோ, மோட்டாா் சைக்கிள்களில் செல்வோா் முகக்கவசம் அணிந்துள்ளனரா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா என வாகங்களை நிறுத்தி தணிக்கையில் ஈடுபட்டனா்.

இந்த வாகன தணிக்கையின்போது, தகுதிச் சான்று இல்லாமல் ஆட்டோ, காா், சுமை ஆட்டோ என 7 வாகனங்கள் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, வாகனச் சோதனை மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலா் பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT