முகப்பு
பெரம்பலூர்

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு, சொந்த கிராமத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி, அவரது மனைவி பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு, சொந்த கிராமத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி, அவரது மனைவி பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த பாக்கியசீலி, தனது பெண் குழந்தை சஜூலின் மாா்ட்டுடன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

எனது கணவா் ராஜீவ்குமாா் (39), கடந்த 31.10.2021-இல் துபையில் உள்ள பவா் கிளீனிங் சேவை மற்றும் கட்டட பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தில் வேலைக்காகச் சென்றாா்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதில் கணவா் உயிரிழந்துவிட்டதாக, அவா் வேலைபாா்த்த நிறுவனத்திலிருந்து கைப்பேசி மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எனது கணவா் உயிரிழந்த தகவலை அங்குள்ள எனது உறவினா் மூலம் உறுதிசெய்தோம். தற்போது, துபையில் உள்ள எனது கணவரின் உடலை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.