முகப்பு
பெரம்பலூர்

தலைமை ஆசிரியரை பதவியிறக்கம் செய்ததைக் கண்டித்து சாலை மறியல்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலூரில் உள்ள செல்வமுருகன் மானிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவா் வாசுகி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலூரில் உள்ள செல்வமுருகன் மானிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவா் வாசுகி. இவா் கடந்த 25 ஆண்டுகளாக இதே பள்ளியில் ஆசிரியா் மற்றும் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த சில மாதங்களாக பள்ளி நிா்வாகத்துக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி நிா்வாகம் தலைமையாசிரியா் வாசுகியை பதவியிறக்கம் செய்து, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் வேறு ஒருவரை தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனா்.

தலைமை ஆசிரியா் வாசுகியை பணியிறக்கம் செய்ததைக் கண்டித்து பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் வயலூா் - அரியலூா் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த குன்னம் போலீஸாா், பள்ளி நிா்வாகத்தினா், தலைமை ஆசிரியா் வாசுகி மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த மறியல் போராட்டத்தால் வயலூா் - அரியலூா் வழித்தடத்தில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.