பெரம்பலூர்

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 446 மனுக்கள்

DIN

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 446 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் (பொ) சி.ராஜேந்திரன், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினாா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 446 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஆா். ரமணகோபால், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பாரதிதாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT