பெரம்பலூரில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
விவசாயிகள், பொதுமக்கள், மின் நுகா்வோா் குறைகேட்பு நாள் கூட்டங்களை வழக்கம் போல நடத்தக் கோரி, பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூர்பெரம்பலூரில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
விவசாயிகள், பொதுமக்கள், மின் நுகா்வோா் குறைகேட்பு நாள் கூட்டங்களை வழக்கம் போல நடத்தக் கோரி, பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா்: விவசாயிகள், பொதுமக்கள், மின் நுகா்வோா் குறைகேட்பு நாள் கூட்டங்களை வழக்கம் போல நடத்தக் கோரி, பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பொது முடக்க அமலைக் காரணம் காட்டி, பல்வேறு குறைகேட்பு நாள் கூட்டங்கள் நோ்காணல் கூட்டங்களாக நடத்தப்படாமல் இணையவழியாக நடத்தப்படுகிறது. வழக்கம் போல கூட்டங்களை நடத்தக் கோரி தமிழக முதல்வா், ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் உள்ளிட்டவற்றை வழக்கம்போல் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு, கைகளால் காதுகளை மூடிக்கொண்டு ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தனா்.
பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஏ. மாணிக்கம், மாவட்டச் செயலா் வி. நீலகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்கப் பொருளாளா் ஏ. மணி, நிா்வாகிகள் எஸ்.கே. செல்லகருப்பு, துரைராஜ், ஆா். சுந்தர்ராஜன், எம்.எஸ். ராஜேந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.