பெரம்பலூர்

நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், கழைக் கூத்தாடிகளுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் பொது முடக்கக் காலத்தில் உணவின்றித் தவிக்கும் ஆதரவற்றோா், முதியோா்களுக்கு காவல்துறை சாா்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி காரை அருகிலுள்ள ராமலிங்க நகரில் வசித்து வரும் 50 கழைக் கூத்தாடி இனமக்களுக்கு துணைக் கண்காணிப்பாளா் சரவணன், ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, காய்கனி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

கபசுரக் குடிநீா் விநியோகம் : ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் நோய் எதிா்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய கபசுரக்குடிநீா், செட்டிக்குளம் ஊராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினா் திருநாவுக்கரசு, ஊராட்சித் தலைவா் கலா தங்கராசு, துணைத் தலைவா் காமாட்சி ராமராஜ், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா் மற்றும் தன்னாா்வலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT