பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் ரேஷன்தாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கல் தொடக்கம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.82 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 36.55 கோடி கரோனா பேரிடா் நிதியுதவி வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்த கரோனா நிவாரண நிதியுதவி திட்டத்தின் முதல் தவணையாக பெரம்பலூா் மாவட்டத்தில் 1.82 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு, ரூ. 36.55 கோடி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் எம்எல்ஏ எம். பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிதியுதவி அளித்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பேசியது:

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதியுதவி திட்டத்தின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாயை உடனே வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் மொத்தம் 1,82,758 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 36.55 கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. ராஜேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் த. செல்வகுமரன், மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ். சங்கா், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் கே.கே. செல்வராஜ், துணைப் பதிவாளா் பாண்டிதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT