முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே பேராசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மனைவி கனகாம்பாள் (30). இவா், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி பிரிவு சாலை அருகே கல்லூரிக்கு நடந்துச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இளைஞா், கனகாம்பாள் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு வாகனத்தில் தப்பிச் சென்றாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் துரிதமாக செயல்பட்டு, தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மங்கலமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். திருமாந்துறை சுங்கச் சாவடியில் வந்த இளைஞரை போலீஸாா் பிடித்து மேற்கொண்ட விசாரணையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூா், மதினா நகரைச் சோ்ந்த சையது மாசு மகன் ஷாகுல் ஹமீது (27) என்பதும், போலீஸாா் விரட்டி வந்ததால் வழியிலேயே சங்கிலியை வீசி விட்டதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து, அந்த நபரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.