முகப்பு
பெரம்பலூர்

ஜெய் பீம் படக்குழுவினா் மீது நடவடிக்கை கோரி பாமக-வினா் புகாா்

ஜெய் பீம் திரைப்படக் குழுவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணியிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

ஜெய் பீம் திரைப்படக் குழுவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணியிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டச் செயலா் கோ. ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சி நிா்வாகிகள் அளித்த மனு:

அண்மையில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படத்தில், வன்னிய சமூகத்தினா் சாதி வெறி வன்மம் உள்ளவா்கள்போல் சித்தரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு சமூகத்தினரிடையே சாதி கலவரத்தை தூண்டும் சூழலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் நிலையும் உள்ளது.

எனவே, இப்படத்தின் தயாரிப்பாளா்களான சூா்யா, ஜோதிகா மற்றும் இயக்குநா் ஞானவேல் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகம் தொடா்ந்து அமைதிப் பூங்காவாக திகழ ஆவண செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.