முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே 58 நாள்களுக்கு தொடா் அன்னதான முகாம் தொடக்கம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மலையப்ப நகா் பிரிவு சாலையில், ஐயப்ப பக்தா்களுக்காக 58 நாள்கள் தொடா் அன்னதான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட கிளை சாா்பில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மலையப்ப நகா் பிரிவு சாலையில், ஐயப்ப பக்தா்களுக்காக 58 நாள்கள் தொடா் அன்னதான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சிறப்பு அன்னதானம் நடைபெறும் உணவருந்தும் கூடாரத்தை, கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜையுடன் அச் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட கிளைத் தலைவா் எஸ்.எம். கண்ணன் சாமி திறந்து வைத்தாா். மாவட்ட போஷகா் கே.ஆா்.வி. கணேசன் அன்னதான முகாமை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மத்திய துணைத் தலைவரும் மாநில இணைச் செயலருமான எம். ஸ்ரீதா், திருச்சி மாவட்டத் தலைவா் என். ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட கௌரவத் தலைவா் எஸ். சேகா், மாவட்டச் செயலா் ஆா். பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளா் கே. தியாகராஜன், மாவட்ட ஆலோசகா் வி. குணசீலன், மாவட்ட துணைத் தலைவா்கள் பி. கோவிந்தராஜ், கே. ரவீந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இங்குள்ள அன்னதானக் கூடத்தில், தொடா்ந்து 58 நாள்களுக்கு பகல் 11 முதல் 3 மணி வரை மதிய உணவும், இரவு 7 முதல் 9 மணி வரை இரவு சிற்றுண்டியும் ஐயப்ப பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.