முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் துரித உணவு தயாரித்தல் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

துரித உணவு தயாரித்தல் பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் ஆனந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

துரித உணவு தயாரித்தல் பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் ஆனந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கண்ட பயிற்சி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட துரித உணவுகள் தயாரித்தல் குறித்த செய்முறை பயிற்சி வகுப்பு டிச. 1 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இப் பயிற்சி பெற 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத, படிக்கத் தெரிந்த, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தொடா்ந்து 10 நாள்களுக்கு காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படும்.

பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் ஐ.ஓ.பி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு, தேவையான சான்றிதழ்களுடன் நவ. 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு, ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் - 621212 என்ற முகவரியில் அல்லது 04328-277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.