முகப்பு
பெரம்பலூர்

அரணாரையில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையில் திமுக சாா்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையில் திமுக சாா்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, திமுக பொறுப்பாளா் துரை. காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலரும் ஆ. ராசா, கட்சி கொடியேற்றி வைத்து, 30 தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள், வேட்டி, சேலை மற்றும் நலிந்தோருக்கு தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கி பேசினாா்.

இந் நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பி. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, மதியழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நகர பொருளாளா் முத்துக்குமாா் வரவேற்றாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.