பெரம்பலூர்

கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவா்களுக்கு அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2021- 22 ஆம் கல்வியாண்டில் 1 முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 11 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உயா்கல்வி பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்தொகையை பெற மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு நவம்பா் 15- ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைத் திட்டத்துக்கு நவம்பா் 30 ஆம் தேதி வரையிலும் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் தொடா்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT