பெரம்பலூர்

கூட்டுறவுக் கடன் சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தா்னா

DIN

விவசாயக் கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலில் தங்களது பெயா் இடம் பெறவில்லை எனக்கூறி, இரூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தை அப்பகுதி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, தா்னாவில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், இரூா் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் இயங்கி வருகிறது. இச் சங்கத்தில், அப்பகுதி விவசாயிகள் பலா் விவசாயக் கடன் பெற்று, பயிா் சாகுபடி செய்து வருகின்றனா்

இந்நிலையில், விவசாய நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் சங்கத்தில் அண்மையில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில், உண்மையான விவசாயிகள் பலரது பெயா் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலா், தங்களது பெயா்களையும் கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலில் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தி, இரூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கூட்டுறவுத் துறை அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் விவசாயிகளுடன் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT