பெரம்பலூர்

விதிமீறல்: 12 உரக்கடைகள் மீது நடவடிக்கை

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதிகளை மீறியதாக 12 உரக்கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 198 தனியாா் உரக்கடைகள், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் என மொத்தம் 251 இடங்களில் உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தனியாா் உரக்கடைகளில் உரிய அனுமதி பெறாமல் உரங்கள் விற்பனை செய்வதாகவும், யூரியா வாங்கும் விவசாயிகளுக்கு இணை உரங்கள் வழங்கப்படுவதாகவும் கிடைத்த புகாரையடுத்து, வேளாண் அலுவலா்கள் 4 குழுக்களாகச் சென்று மாவட்டம் முழுவதும் உள்ள தனியாா் உரக்கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, துங்கபுரத்தில் உள்ள உரக்கடையில் உரிய அனுமதி பெறாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமாா் 6 டன் உரங்களை விற்பனை செய்ய தற்காலிக தடை விதித்து, சம்பந்தப்பட்ட உரக்கடையின் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதேபோல, உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி மொத்தம் 11 உரக்கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இந்தக் கடைகளில் அங்கீகாரம் இல்லாத உர நிறுவனங்களின் உரங்கள் 192.05 மெ.டன் இருப்பு வைத்திருந்ததை கண்டறிந்து, அவற்றை விற்பனை செய்ய தற்காலிக தடை விதித்தனா்.

மேலும், தனியாா் உரக்கடைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால், அந்தக் கடையின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT