பெரம்பலூர்

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

திரிபுராவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூரில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், திரிபுராவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT