பெரம்பலூர்

பெரம்பலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா் நகர அதிமுக சாா்பில் திமுக அரசைக் கண்டித்து, ரோவா் வளைவு பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் நகரச் செயலா் ஆா். ராஜபூபதி தலைமை வகித்தாா். முன்னாள் மக்களவை தொகுதி எம். சந்திரகாசி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பூவை த. செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள், சட்டப்பேரவை துணைத் தலைவரும், மாநில அமைப்புச் செயலருமான அ. அருணாசலம் கண்டன உரையாற்றினாா்.

மின் கட்டணம், பால் பொருள்கள் விலை உயா்வு, சொத்து வரி உயா்வு, சட்டம்- ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட திமுக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் எம்.என். ராஜாராம், ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், கா்ணன், சிவப்பிரகாசம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சி. ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT