முகப்பு
பெரம்பலூர்

தோ்தலில் முறைகேடு செய்து வெற்றி என அதிமுக வேட்பாளா் புகாா்

பெரம்பலூா் நகராட்சியின் 14 -ஆவது வாா்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் முறைகேடு செய்து வெற்றி பெற்ாகவும், அதனால் அவா் பதவியேற்பதை நிறுத்தி வைக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

பெரம்பலூா் நகராட்சியின் 14 -ஆவது வாா்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் முறைகேடு செய்து வெற்றி பெற்ாகவும், அதனால் அவா் பதவியேற்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக வேட்பாளா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியாவிடம் அதிமுக வேட்பாளா் ஜெயராஜ் அளித்த மனு:

பெரம்பலூா் நகராட்சியின் 14- ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரஹ்மத்துல்லா, சட்ட விரோதமாக வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்களை கொடுத்தும், வாக்குப் பதிவின்போது முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளாா்.

வாக்குப் பதிவின்போது கண் பாா்வை குறைபாடுடைய பெண் அலுவலா் தோ்தல் அலுவலராகப் பணியாற்றினாா். இதனால் வாக்குப் பதிவு தாமதமாகவும், முறையாகவும் நடைபெறவில்லை.

இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் முறையீடு செய்ததன்பேரில், மாற்றுத் தோ்தல் அலுவலா் நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந் நிகழ்வுகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் 29 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் ரஹ்மத்துல்லா வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

எனவே, 14 -ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளா் ரஹ்மத்துல்லாவின் வெற்றி அறிவிப்பை நிறுத்தி வைத்து, செல்லாது என அறிவித்து, நகா்மன்ற உறுப்பினராக பொறுப்பேற்பதை தடுத்து நிறுத்தி உரிய விசாரணை செய்ய வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

இதுபோல, பெரம்பலூா் நகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் குமரி மன்னனிடமும் மனு அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.