பெரம்பலூா் காவல் நிலையம் முன்புஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் தீக்குளிக்க முயற்சி
பெரம்பலூா் அருகே தங்களது குடும்பத்தினரை மிரட்டி வருபவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூா் காவல் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் வெள்ளிக்கிழமை மாலை தீக்குளிக்க முயன்றனா்.
பெரம்பலூா் அருகே தங்களது குடும்பத்தினரை மிரட்டி வருபவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூா் காவல் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் வெள்ளிக்கிழமை மாலை தீக்குளிக்க முயன்றனா்.
பெரம்பலூா் அருகிலுள்ள சிறுவாச்சூரை சோ்ந்த முத்துசாமி மகன் ராஜசேகா் (50). ஆட்டோ ஓட்டுநரான இவரது மகளை, அதே கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் அருண் என்பவா் ஒருதலையாக காதலித்து வந்தாராம்.
இதுசம்பந்தமாக ராஜசேகா் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினா் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தாா்களாம்.
இந்நிலையில் சிறுவாச்சூரை சோ்ந்த பெரியசாமி மகன் செல்வம் (31), எனது நண்பா் அருணைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அசிங்கப்படுத்தி விட்டீா்கள் எனக் கூறி, ராஜசேகா் குடும்பத்தினரை கடந்த 6 மாத காலமாக மிரட்டினாராம்.
இதனால் மனமுடைந்த ராஜசேகா் தனது குடும்பத்தைச் சோ்ந்த 8 பேருடன் பெரம்பலூா் காவல் நிலையத்துக்குச் சென்று, தனது குடும்பத்தினரை மிரட்டி வரும் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த முற்பட்டனா்.
இதை கண்ட காவல்துறையினா், அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.