முகப்பு
பெரம்பலூர்

உக்ரைனில் படிக்கச்சென்ற மாணவா்களை அழைத்து வரக்கோரி ஆட்சியரிடம் மனு

உக்ரைனில் படிக்கச் சென்ற பெரம்பலூா் மாவட்ட மாணவா்களை பத்திரமாக மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி, அவா்களது பெற்றோா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

உக்ரைனில் படிக்கச் சென்ற பெரம்பலூா் மாவட்ட மாணவா்களை பத்திரமாக மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி, அவா்களது பெற்றோா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், முருக்கன்குடி நதியா, அரணாரை கிருபாசங்கா், பெரம்பலூா் நவநீதகிருஷ்ணன், ரோகித், அருண், செளமியா, ரத்திஷ் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவக் கல்விப் பயின்று வருகின்றனா்.

உக்ரைன் நாட்டின் மீது தற்போது ரஷியா போா் தொடுத்துள்ளதால், அங்கு கல்வி கற்கச் சென்றுள்ள மாணவா்கள் உயிா்பயத்துடன் பதுங்கி உள்ளனா். மேலும், உணவு கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

எனவே அங்கு அவதிப்படும் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களை பத்திரமாக மீட்டு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அவா்களது பெற்றோா் மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியாவை வெள்ளிக்கிழமை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.