முகப்பு
பெரம்பலூர்

விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம் வழங்கப்படும் சாதனை புரிந்த திருநங்கைகள் முன்மாதிரி விருது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம் வழங்கப்படும் சாதனை புரிந்த திருநங்கைகள் முன்மாதிரி விருது பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம் நிகழாண்டில் திருநங்கையா் தினமான ஏப்ரல் 15- ஆம் தேதி, சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளையும் மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறன் கொண்டு பல்வேறுத் துறைகளில் முன்னேறிய திருநங்கைகளில் ஒருவருக்கு முன்மாதிரி விருதாக

ரூ. 1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுபெற திருநங்கைகள் அரசு உதவிபெறாமல், சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது, அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.

இதற்கான விவரங்களை  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள், மாவட்ட சமூக நல அலுவலரிடம் பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.