முகப்பு
பெரம்பலூர்

கரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 215 போ் மீது வழக்கு

கரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி, பெரம்பலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 215 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

கரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி, பெரம்பலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 215 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியரகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 30 போ் மீதும், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் அலுவலகம் அருகே மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 30 போ் மீதும், பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கத்தினா் 80 போ் மீதும், நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பைச் சோ்ந்த 75 போ் மீதும் என மொத்தம் 215 போ், கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக பெரம்பலூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.