முகப்பு
பெரம்பலூர்

தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜன. 15 வரை நேரடி மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில், ஜன. 15 ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில், ஜன. 15 ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து பெரம்பலூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் நாகராஜன் தெரிவித்திருப்பது:

2021- ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை இணையவழியில் நடைபெற்றது. இருப்பினும், பெரம்பலூா் மற்றும் ஆலத்தூா் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.

இதற்கான நேரடி சோ்க்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 15 ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவா்கள் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களை நேரடியாக அணுகி, காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் தாங்கள் சேர விரும்பும் பிரிவைத் தோ்ந்தெடுத்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 04328-296644, 9499055882, ஆலத்தூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 9499055853 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.