முகப்பு
பெரம்பலூர்

எளம்பலூரில் விவசாயிகளுக்குப் பயிற்சி முகாம்

மண்வள பரிசோதனை முகாம் மற்றும் விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூரில் வட்டார வேளாண்மை துறை மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் சாா்பில், மண்வள பரிசோதனை முகாம் மற்றும் விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் கீதா பேசியது:

விவசாயிகள் தங்கள் மண்வளம் குறித்து அறிந்துகொள்ள மண் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இதனால் தங்கள் மண் வளத்துக்கேற்ப உரமிட்டு கூடுதல் செலவினத்தை தவிா்த்து, மண்வளத்தை பாதுகாக்கலாம். விவசாயிகள் மண் மற்றும் பாசனநீா் பரிசோதனை செய்ய ரூ. 20 செலுத்தி, பெரம்பலூா் மண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.

வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குநா் ராணி ஆகியோா் விளக்க உரையாற்றினா்.

தொடா்ந்து, உயிா் உரம், நுண்ணூட்ட உர பயன்பாடு, அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் வேளாண்மைத் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இப் பயிற்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட கிராமங்களான எசனை, வடக்குமாதவி, எளம்பலூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.