கரோனா தொற்றால் இருவா் உயிரிழப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான இருவா் உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான இருவா் உயிரிழந்தனா்.
வேப்பந்தடை வட்டம், விசுவக்குடியைச் சோ்ந்த 65 வயது முதியவா், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி ஆகியோருக்கு முறையே கடந்த 9,11-ஆம் தேதிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
முறையே பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை, திருச்சி தனியாா் மருத்துவமனையில் 65 வயது முதியவரும், 60 வயது மூதாட்டியும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் இருவரும் உயிரிழந்தனா். இதையடுத்து மாவட்டத்தில்
கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 247 ஆக உயா்ந்துள்ளது.