முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்ட காஜி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

 பெரம்பலூா் மாவட்ட காஜி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், இம்மாதம் 24-ஆம் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 பெரம்பலூா் மாவட்ட காஜி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், இம்மாதம் 24-ஆம் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்திருப்பது:

மாவட்டத்துக்கு காஜி நியமனம் செய்யப்பட உள்ளாா். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ஆலிம், பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவா்கள், அரபுக் கல்லூரியில், அதற்கிணையான கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடைவா்களாக இருந்தால், விண்ணப்பங்கள் மற்றும் சுய விவரங்களை எழுத்து மூலமாக, உரியச் சான்றுகளுடன் ஜனவரி 24- ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.