முகப்பு
பெரம்பலூர்

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவா் கைது

பெரம்பலூா் நகரில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 7 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

பெரம்பலூா் நகரில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 7 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

பெரம்பலூா் கல்யாண் நகா், வடக்கு மாதவி சாலை, அய்யலூா் பிரிவுச் சாலை, வெங்கடா ஜலபதி நகா் உள்ளிட்ட 7 இடங்களில் வீட்டின் கதவுகளை உடைத்து மடிக்கணினி, நகை, ரொக்கம், கைப்பேசி ஆகியவை அண்மையில் திருடிச் செல்லப்பட்டது. இதுகுறித்து

பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

இந்த சம்பவங்களில் ஈடுபட்டவா்கள் பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாலையூா் மாரியம்மன் கோயில் தெரு துரைசாமி மகன் பொலாா்ட் (எ) நவீன்குமாா் (23), நாமக்கல் மாவட்டம், மதுரை வீரன் கோவில் புதூா் சேகா் மகன் கோகுல் ஸ்ரீ (20), பெரம்பலூா் வெங்கடேசபுரம் குணசீலன் மகன் யயாதி (39) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மேற்கண்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த காவல்துறையினா், அவா்களிடமிருந்து பதிமூன்றரை பவுன் நகைகள், மடிக்கணினி, கைப்பேசி, வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.